உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயில் பூச்செரித்தல் விழா

ராமேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயில் பூச்செரித்தல் விழா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி உபகோயில் பத்திரகாளியம்மன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் தூக்கி, நேர்த்தி கடன் செலுத்தினர். பத்திரகாளியம்மன் கோயிலில் பூச்செரித்தல் விழாவையொட்டி, கடந்த மே 3 தேதி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று 500க்கு மேலான பெண்கள் பக்தர்கள் கோயிலில் இருந்து பால்குடம் தூக்கியும், 10 க்கு மேலான பக்தர்கள் அலகு குத்தி கோயில் நான்கு ரதவீதியில் ஊர்வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !