மழை வேண்டி தீப வழிபாடு
ADDED :3183 days ago
கோவை : ’இயற்கையை எதிர்ப்பது, அழிவுக்கு காரணமாகும்’ என, மழை வேண்டி நடந்த சிறப்பு பூஜையில் தெரிவிக்கப்பட்டது.கோவை வட வள்ளியில் உள்ள ஐ.ஓ.பி., காலனியில் உள்ள, சீரடி சாய்பாபா கோவிலில், மழை வேண்டி சிறப்பு தீப வழிபாடு நடத்தப்பட்டது. பக்தர்கள், தீபம் ஏற்றி, மழை வேண்டி பிராத்தனை செய்தனர்.நிகழ்ச்சியில், ’மனிதன் என்றைக்கு இயற்கையை அழிக்கிறானோ அன்று, அழிவு நிச்சயம் என, சித்தர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இயற்கை அழிவு தவிர்க்கப்பட வேண்டும்’ என, வலியுறுத்தப்பட்டது.திரளான பக்தர்கள் பங்கேற்று, தீபம் ஏற்றி வழிபட்டனர்.