தணிகாசலம்மன் கோவிலில் வரும் 16ல் சண்டி ஹோமம்
திருத்தணி : தணிகாசலம்மன் கோவிலில், வரும் 16ம் தேதி, மஹா சண்டி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. திருத்தணி, அக்கைய்யாநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக, நான்காம் ஆண்டு விழாவையொட்டி, சண்டி ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. விழாவையொட்டி, வரும், 15ம் தேதி, கோவில் வளாகத்தில் யாகசாலை, 108 கலசங்கள் வைத்து விக்னேஸ்வர பூஜை, மஹா சங்கல்பம், கோ பூஜை, மகாலட்சுமி ஹோமம் உட்பட, சண்டி பாராயணம் நடக்கிறது. மறுநாள், 16ம் தேதி, காலை, 9:00 மணிக்கு, கலச அலங்காரம் மற்றும் சண்டி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் மற்றும் மூலவருக்கு கலச நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. மாலை, 5:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.