பழையசீவரம் மலை கிரிவலத்திற்கு உகந்தது
ADDED :3184 days ago
பழையசீவரம் : பவுர்ணமி தினத்தில், பக்தர்கள் கிரிவலம் சுற்றி வருவதற்கு, பழையசீவரம் மலை ஏற்றதாக உள்ளது. வாலாஜாபாத் அடுத்த பழையசீவரம் கிராமத்தில், சிறிய அளவில் மலை உள்ளது. இதன் சுற்றளவு, 2 கி.மீ., நீளமாகும். இந்த மலை மீது, பெருமாள் மற்றும் சிவனுக்கு, தனித்தனி கோவில்கள் உள்ளன. இந்த மலையில், பவுர்ணமி தினத்தன்று, பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். வேண்டுதல் உடனடியாக நிறைவேறுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தெரிவித்தார். பழையசீவரம் மலையில், இடிந்த நிலையில் சிவன் கோவில் இருந்தது. அது, நால்வர் உழவார பணிக் குழுவினர் உதவியுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிவன் கோவிலுக்கு செல்வதற்கு தனிப்பாதையும் மலையில் உருவாக்கப்பட்டுள்ளது. பவுர்ணமி தினத்தில், கிராமவாசிகள் மட்டுமல்லாது பிற சிவ பக்தர்களும் கிரிவலம் செல்கின்றனர். எம்.ராஜேந்திரன், பழையசீவரம்