வரவூர் மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம்
ADDED :3069 days ago
கடலுார்: கடலுார் வண்டிப்பாளையம் வரவூர் மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடலுார் வண்டிப்பாளையத்தில் கங்கையம்மன், காளிகா பரமேஸ்வரி சமேத வரவூர் மாரியம்மன் கோவிலில் சக்ர செடல் ரத பெருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. தினமும் காலை சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. 12ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், சக்ர செடல் ரதத்திற்கு சிறப்பு யாக பூஜை, அப்பர் சுவாமி குளக்கரையில் கரகம் கொண்டு வந்து வரவூர் மாரியம்மனுக்கு செடல் போடும் உற்சவம் நடந்தது. தொடர்ந்து கங்கையம்மன், காளிகா பரமேஸ்வரி சமேத வரவூர் மாரியம்மன் சக்ர செடல் ரதத்தில் எழுந்தருளியதும் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.