உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவில் தல விருட்சத்தை மீட்க முயற்சி

விருத்தகிரீஸ்வரர் கோவில் தல விருட்சத்தை மீட்க முயற்சி

விருத்தாசலம்: கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில் அமைந்துள்ள விருத்தகிரீஸ்வரர் கோவில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.இங்கு, தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. இந்த மரம், 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது.’கோவில்களில் பழமை வாய்ந்த தல விருட்சங்களை மரபணு மூலமாகவோ, பதியம் செய்தோ, அழிவிலிருந்து மீட்க வேண்டும்’ என, இந்து சமய அறநிலையத் துறைக்கு, மறைந்த முன்னாள் முதல்வர், ஜெ., உத்தரவிட்டார். அதன்படி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், வன்னி மரத்தின் கிளையை பதியம் போட்டு, மீட்க முயற்சி செய்தனர். ஆனால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.அதையடுத்து, விதை மூலம் கன்று உற்பத்தி செய்ய, விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள வன்னி மரத்தில் இருந்து உதிர்ந்த தரமான விதைகளை, மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், சேகரித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !