சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தெப்போற்சவம்
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில், தருமபுரம் ஆதினத்திற்கு சொந்தமான சட்டைநாதர் கோவிலில் உள்ளது. இங்கு சுவாமி பிரமபுரீசுவரர், தோணியப்பர், சட்டைநாதர், குரு, லிங்க, சங்கமம் என்று மூன்று நிலைகளில் எழுந்தருளிக்காட்சி அளிக்கின்றனர். சீர்காழியில் அவதரித்த திருஞானசம்பந்தருக்கு, அம்பாள் கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் ஞானப்பால் வழங்கினார் என்பது இக்கோவிலின் தலவரலாறு ஆகும். இதனால் ஞானம்பெற்ற திருஞான சம்பந்தர் தனது 3 வது வயதில் தேவாரம் பாடினார். இக்கோயிலின் இவ்வாண்டு சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 13ம் நாள் விழாவாக தெப்போற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி தெப்பத்தில் எழுந்தருள, தெப்பம் பிரம்ம தீர்த்த குளத்தை 3 முறை வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.