பாலசமுத்திரம் பெருமாள்கோயில் கும்பாபிஷேக பணிகள் மந்தம்
பழநி: பழநி அருகே பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக பணிகள் ஓராண்டுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடக்கிறது. அதனை விரைந்து முடிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான, அகோபில வரதராஜப்பெருமாள் கோயில் பலநுாறுஆண்டுகள் பழமையானது. இங்கு ரூ.80லட்சம் செலவில் கும்பாபிஷேக திருப்பணி துவங்கியது. இதில் கோபுர சிற்பங்கள், முன் மண்டபம், கல்துாண் பாலீஷ் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படுகிறது. திருப்பணிகள் துவங்கி ஓராண்டுக்கு மேலாகியும் இன்னமும் முடிந்தபாடில்லை. தற்போது முதல்அமைச்சரின் அன்னதான திட்டத்தில் தினமும் நுாறுபேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளுக்குநாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், பாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோயில், திருப்பணிகளை விரைந்து முடித்து, மகா கும்பாபிஷேகம் நடத்தவேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.