கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED :3070 days ago
கொடைக்கானல், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு 108 தட்டுகளுடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. வேலப்பா பக்தர்கள் சார்பில் அன்னதானம், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.