உக்கரவீரமாகாளி அம்மன் கோயில் வருஷாபிஷேகம்
ADDED :3181 days ago
நரிக்குடி, நரிக்குடி அருகே புளிச்சிகுளத்தில் ஸ்ரீ உக்கரவீரமாகாளி அம்மன், ஸ்ரீ சக்தி கணபதி ஆலய வருஷாபிஷேகம் நடந்தது. காலையில் அம்மன் சன்னதியில் சிறப்பு யாக பூஜை மற்றும் 108 சங்காபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. மாலை ஆறு மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. நரிக்குடி மற்றும் சுற்றுப் பகுதியினர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை ஸ்ரீ மாகாளியம்மன் டிரஸ்ட் நிர்வாகி சிங்கப்புலி செய்திருந்தார்.