சீதாராம கல்யாணம் மஹோத்ஸவ விழா
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரத்தில், சீதாராம கல்யாணம், மஹோத்ஸவ விழா கோலாகலமாக நடந்தது. கிருஷ்ணராயபுரம் நடு அக்ரஹாரத்தில், சீதாராம கல்யாணம், மஹோத்ஸவ விழா முன்னிட்டு, சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக, கடந்த, 11 முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று முக்கிய நிகழ்ச்சியாக, காலை, 7:00 மணிக்கு உஞ்சவிருத்தி துவங்கி, 8:00 மணிக்கு கொட்டனோத்ஸவம், சீதாராம கல்யாணம், மஹோத்ஸவம், ஞானாந்த நாம சங்கீர்த்தன மாதார் மண்டலி சென்னை திருமதி கல்யாணி மார்க்பந்து தலைமையில் பஜனை நடந்தது. தொடர்ந்து காலை, 11:55 மணிக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, திருச்சி தேசிய கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியர் சுந்தர்ராமன் செய்திருந்தார்.