உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் கம்பம் ஒப்படைப்பு

மாரியம்மன் கோவில் கம்பம் ஒப்படைப்பு

கரூர்: கரூர், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவுக்காக, நேற்று காலை கம்பம் ஒப்படைக்கும் விழா நடந்தது. கரூரில், மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. நேற்று காலை, 7:00 மணிக்கு கரூர் அருகே, பாலம்மாள்புரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் கம்பம் ஒப்படைக்கும் விழா, நாதஸ்வர இசை மற்றும் மஹா தீபாராதனையுடன் துவங்கியது. தொடர்ந்து, ஜெகன்நாத ஓதுவார் குழுவினர் சார்பில், தேவராத் திருபுகழ் அபிராமி அந்தாதி பாடல்கள் பாடப்பட்டன. பின், கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மங்கள வாத்தியங்கள் முழங்க, கரூர் மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !