உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை கோவில் திருவிழா: பக்தர்கள் பரவசம்

குளித்தலை கோவில் திருவிழா: பக்தர்கள் பரவசம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, தோகைமலை பகவதி அம்மன், மகாமாரியம்மன் கோவில்கள் திருவிழா நடக்கிறது. நேற்று வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவிலுக்கு, குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக் குடம் எடுத்துவந்து, தோகைமலை பகவதி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் எடுத்து சென்றனர். அதேபோல், பகவதிஅம்மன் கோவிலில் இருந்து, தீர்த்தக் குடத்துடன், பால்குடம், தீச்சட்டி, பால் காவடி, பறவை காவடி, கரும்பு தொட்டில்களுடன் பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டு இருந்த, பூக்குழியில் பக்தர்கள் ஒவ்வொருவராக இறங்கி, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அதேபோல், கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் மேளதாளத்துடன் குளித்தலையின் முக்கிய வீதி வழியாக பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !