உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவிலில் பட்டாபிஷேகம்

ராமர் கோவிலில் பட்டாபிஷேகம்

அ.பட்டணம்: கோதண்டராமர் கோவிலில் பட்டாபிஷேகம் நடந்தது. சேலம், அயோத்தியாப்பட்டணம், கோதண்டராமர் கோவிலில், நேற்று, கோமாதா பூஜை, பால் குட ஊர்வலத்துடன், திருக்கல்யாணம் தொடங்கியது. மூலவருக்கு அபிஷேகத்தை தொடர்ந்து, மாப்பிள்ளை, பெண் வீட்டார் சீர்வரிசை அழைப்பு நடந்தது. உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து, முத்துக்கள் பதிக்கப்பட்ட கிரீடம் ராமருக்கும், சீதாவுக்கும் சூட்டப்பட்டு, பட்டாபிஷேகம் நடந்தது. மாலையில், சுவாமி திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !