வணக்கம் சொல்ல மறக்காதீங்க!
ADDED :3174 days ago
தெரிந்தவர், பெரியவர்களை சந்தித்தால் ஹலோ... என சொல்லி கை குலுக்குகின்றனர்.(நோய் தொற்றும் அபாயம் உண்டு). கைகளைக் குவித்து வணக்கம் (நமஸ்காரம்) சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம். நமஸ்காரம் என்பது நம என்னும் சொல்லில் இருந்து வந்தது. நம என்பதற்கு பணிதல் என்பது பொருள். அனைவரிடமும் பணிவுடன் இருக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் சொல்வதே வணக்கம்.