உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 24ல் துவக்கம்

சுந்தரராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் 24ல் துவக்கம்

ஆர்.கே.பேட்டை : சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தர ராஜ பெருமாள் கோவிலில், வரும் 24ம் தேதி, காலை கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. 27ல், கருட சேவையும், 29ல், தேர் திருவிழாவும் நடைபெறும். ஆர்.கே.பேட்டை பிராமணர் தெருவில் அமைந்துள்ள சுந்தரவள்ளி, விஜயவள்ளி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோவிலில், வரும் 24ம் தேதி, ஆண்டு பிரம்மோற்சவம் துவங்குகிறது. அன்று, காலை 6:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி உலா எழுந்தருளுகிறார். தொடர்ந்து தினசரி, சிம்மம், சந்திர பிரபை, சூரிய பிரபை என, பல்வேறு வாகனங்களில் புறப்பாடு செய்யும் பெருமாள், 27ம் தேதி, மாலை கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார். வரும் 29ம் தேதி, காலை 9:00 மணிக்கு, தேரில் உலா எழுந்தருளுகிறார். காலை 11:00 மணிக்கு, சத்திரம் பகுதியில் நிலை கொள்ளும் பெருமாள், மீண்டும், மாலை 4:00 மணிக்கு அங்கிருந்து புறப்பாடு ஆகிறார். பஜார் வீதி, திருத்தணி சாலை, அஞ்சலக வீதி வழியாக, மாலை 6:00 மணிக்கு, கோவில் நிலைக்கு வந்து சேர்கிறார். 30ம் தேதி காலை, சக்கர ஸ்தானமும், மாலையில் குதிரை வாகன உலாவுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.

தேதி    கிழமை    நிகழ்ச்சி
மே 23    செவ்வாய்    அங்குரார்ப்பணம்
24    புதன்    கொடியேற்றம்
25    வியாழன்    சிம்ம வாகனம்
26    வெள்ளி    சூரிய, சந்திர பிரபை
27    சனி    கருட சேவை
28    ஞாயிறு    அனுமந்த வாகனம்
29    திங்கள்    தேர் திருவிழா
30    செவ்வாய்    சக்கர ஸ்தானம், குதிரை வாகனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !