கவுந்தப்பாடி ஈஸ்வரன் கோவிலில் மழை வேண்டி வருண ஜெபம்
ADDED :3148 days ago
பவானி: கவுந்தப்பாடியில், ஈஸ்வரன் கோவிலில், வருண ஜெபம் நடந்தது. பவானி, கவுந்தபாடி, நீள்நெடுங்கண்ணி உடனமர் அண்டம் முழுதுடையார் கோவிலில், நேற்று காலை, மழை வேண்டி வருண ஜெபம், ஹோமம் நடந்தது. நிகழ்ச்சியில், மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடந்தது. சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நால்வர் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் பவானி சிவனடியார் திருகூட்டத்தினர் ஹோமம் நடத்தினர்.