கோப்பம்பாளையத்தில் கருமாரியம்மன் கோவிலில் விழா
ADDED :3071 days ago
புன்செய்புளியம்பட்டி: கோப்பம்பாளையம், கருமாரியம்மன் கோவிலில் நேற்று விழா நடந்தது. புன்செய்புளியம்பட்டி அடுத்த, கோப்பம்பாளையத்தில் கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் சித்திரை திருவிழா கொண்டாடப்படுகிறது. கடந்த, 5ல், பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. கடந்த, 8ல், கம்பம் நடப்பட்டது. கடந்த, 14ல், படைக்கலத்துடன் தீர்த்தக்குடம் எடுத்து, அம்மை அழைத்து வரப்பட்டது. நேற்று காலை, பொங்கல் வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்தனர். மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, சுவாமி திருவீதி உலா நடந்தது. இன்று மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.