பழநி மலைக்கோயில் வைகாசி மாத சிறப்பு யாகபூஜை
ADDED :3402 days ago
பழநி: வைகாசி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி மலைக்கோயில் ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், சிறப்பு யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு கலசநீர் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதேபோல திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்தில், மகா தீபாராதனை நடந்தது.