உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராயகோபுரம் புராதன சின்னம் சீரமைக்க ரூ.2.60 கோடி

ராயகோபுரம் புராதன சின்னம் சீரமைக்க ரூ.2.60 கோடி

மதுரை: மதுரை ராயகோபுரம் புராதன சின்னத்தை மறு சீரமைப்பு செய்யவும், புதுமண்டபத்தில் உள்ள கடைகளை குன்னத்துார் சத்திரத்திற்கு மாற்றி அமைக்கும் பணிகளை மத்திய, மாநில அரசுகளின் மானியத்தில் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மாநகராட்சி கூட்டம் கமிஷனர் சந்தீப் நந்துாரி தலைமையில் நடந்தது. துணை கமிஷனர் மணிவண்ணன், நகர் பொறியாளர் மதுரம், நகர்நல அலுவலர் சதீஷ்ராகவன், நகரமைப்பு அலுவலர் ரங்கநாதன் மற்றும் உதவி கமிஷனர்கள் பங்கேற்றனர்.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ராயகோபுரத்தை மறுசீரமைப்பு செய்ய 2.60 கோடி ரூபாய் மற்றும் 6.48 கோடி ரூபாயில் புதுமண்டபம் பகுதியில் உள்ள கடைகளை குன்னத்துார் சத்திரத்திற்கு மாற்றியமைத்தல் ஆகிய பணிகளை மத்திய, மாநில அரசுகளின் மானியம் 50:50 என்ற விகிதத்தில் மேற்கொள்வதற்கு முடிவு செய்யப்பட்டது.நகர் ஆரம்ப சுகாதார மையங்களை 24 மணி நேரமும் செயல்படும் நகர சமுதாய சுகாதார மையங்களாக தரம் உயர்த்த ஒவ்வொரு மருத்துவமனைக்கும் கட்டுமான பணி மற்றும் இதர செலவினங்களுக்கு தலா 1.50 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி செல்லுார், அன்சாரிநகர், புதுார் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 45 லட்சம் ரூபாயில் பணிகள் நடத்துதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !