உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் தேரோட்டம்

பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் தேரோட்டம்

உளுந்துார்பேட்டை: பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. உளுந்துார்பேட்டை தாலுகா, பரிக்கல் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவில் பிரமோற்சவ விழா, கடந்த 8 ம் தேதி துவங்கியது. கடந்த 14ம் தேதி காலை சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. மாலை வசந்த உற்சவம் நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. உளுந்துார்பேட்டை எம்.எல்.ஏ., குமரகுரு, தேர் வடம் பிடித்து துவக்கி வைத்தார். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் இணைய தலைவர் ஞானமூர்த்தி, மடப்பட்டு சுபா டிவிஎஸ் ஏஜென்சி உரிமையாளர் குமார், அ.தி.மு.க., பேரவை ஒன்றிய இணை செயலாளர் சம்பத்ஐயர், குமரகுருபரன், கண்ணன், பொதுகுழு உறுப்பினர் வளர்மதிபாண்டியராஜ் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !