செல்ல முத்து மாரியம்மன் கோயில் திருவிழா
ADDED :3262 days ago
தேவதானப்பட்டி, தேவதானப்பட்டி பிள்ளை செல்ல முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கோட்டையன் கோயிலில் இருந்து அம்மன் அலங்காரம் செய்து அழைத்து வரப்பட்டது. நேற்று அதிகாலை மா விளக்கு, முளைப்பாரி எடுத்தனர். பின்னர் அலகு குத்தி ,காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.