ராமேஸ்வரம் கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் பூஜை
ADDED :3079 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சிருங்கேரி சுவாமிகள் சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து தரிசனம் செய்தனர். மே 16ல் ராமேஸ்வரம் வந்த சிருங்கேரி பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி நேற்று காலை, ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இணை ஆணையர் செல்வராஜ், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். கோயில் குருக்கள் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை செய்ததும், சிருங்கேரி சுவாமிகள் தரிசனம் செய்தனர். பின் மாலை, கோயில் வடக்கு மூன்றாம் பிரகாரத்தில் சங்கராச்சாரியார் சுவாமி, சந்திரமவுலீஸ்வரர் பூஜை செய்தனர். ராமேஸ்வரம் சிருங்கேரி மட மேலாளர் நாராயணன், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.