உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புண்ணிய நதிகள் எல்லாம் பெண் தெய்வங்களின் அம்சமாகக் கருதப்படுவது ஏன்?

புண்ணிய நதிகள் எல்லாம் பெண் தெய்வங்களின் அம்சமாகக் கருதப்படுவது ஏன்?

சமுத்திரத்தை ஆண் ஸ்வரூபமாகவும் நதிகளை பெண் ஸ்வரூபமாகவும் சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் சமுத்திரத்தை சமுத்திரராஜன் என்றும், நதிகளை பெண் வடிவமாகவும் அழைக்கிறோம். நுட்பமாகக் கவனித்தால் எல்லாமே வருணனின் வடிவங்கள்தான். சமுத்திரராஜன் என்றால் வருணன் தான். இந்தப் பெண் நதிகள் எல்லாம் தன் கணவனை அடையும் விதமாக, சமுத்திரராஜனை அடைய வேண்டும் என்பது நியதி. அதனால்தான் எக்காரணம் கொண்டும் அவற்றைத் தடுக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. கூர்ந்து கவனித்தால் நாம் நதி நீரைப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, சமுத்திரராஜனிடம் சென்று சேரும் நதியைத் தடுக்கக் கூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால்தான் பெண் ஸ்வரூபமாக நதிகளை நாம் வழிபடுகிறோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !