கல்யாண மாலையாக பண மாலை: சங்கமேஸ்வரர் கோவிலில் ருசிகரம்
ADDED :3165 days ago
பவானி: சங்கமேஸ்வரர் கோவிலில், மணம் முடித்த புது ஜோடி, பணமாலை அணிந்து சென்றது, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், கோட்டை மேடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் மேகநாதன், 24; இவர் அத்தை மகள் பூஜா, 20: இவர் டில்லியில் வசிக்கிறார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பவானி சங்கமேஸ்வரர் கோவிலில், நேற்று காலை திருமணம் நடந்தது. தாலி கட்டியவுடன் புதுமண தம்பதியாக, கோவிலைச் சுற்றி வர ஆயத்தமாகினர். இருவரும், 10 ரூபாய் தாள்களால் ஆன, பணமாலை போட்டு, கோவிலை சுற்றினர். மலர் மாலை அணியாமல், பணமாலை அணிந்து சென்ற புது ஜோடியைப் பார்த்து, பலர் வியப்படைந்தனர்.