கும்பாபிஷேகத்திற்கு தயாராகும் வால்பாறை ஐயப்பசுவாமி கோவில்
வால்பாறை: வால்பாறை ஐயப்பசுவாமி கோவிலின் மகாகும்பாபிஷேகவிழாவையொட்டி கோவில் திருப்பணி ஜரூராக நடக்கிறது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி தெய்வாணையுடன் மேற்குமுகமாக நின்ற கோலத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவில் வளாகத்தில் காசிவிஸ்வநாதர், ஐயப்பன், விநாயகர், நவகிரகங்களுக்கு தனித்தனி கோவில் உள்ளது. ஆனால் மிகவும் பழமை வாய்ந்த ஐயப்பசுவாமி கோவில் மட்டும் புதுப்பிக்கப்படாமல் சிறிய அளவில் உள்ளது. இதனையடுத்து இந்த கோவிலை விரிவுபடுத்தி, கும்பாபிஷேக விழா நடத்த கோவில் கமிட்டிகள் முடிவு செய்தனர். இதனையடுத்து ஐயப்பசுவாமி கோவில் விரிவுபடுத்தப்பட்டு கோவிலின் முகப்பு வாயிலில் நர்த்தனகணபதி, ஐயப்பசுவாமி, கருப்புசாமி, சண்டிகேஸ்வரர், காலபைரவர் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் மகா கும்பாபிஷேகவிழா வரும், ஜூன் 4 ம் தேதி காலை நடக்கிறது. இதனையடுத்து கோவில் அழகுபடுத்தும் பணி வேகமாக நடந்துவருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக விழா கமிட்டிகள் செய்துவருகின்றனர்.