சிதம்பரம் திருப்பாற்கடல் மடத்தில் குரு நமச்சிவாயர் குரு பூஜை விழா
சிதம்பரம்: சிதம்பரம் திருப்பாற்கடல் மடம் குரு நமச்சிவாயர் குரு பூஜை விழாவில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடத்தில் அருள்பாலித்து வரும் குரு நமச்சிவாயர் கோவிலில்
குரு நமச்சிவாயர் குரு பூஜை விழா நேற்று நடந்தது.
இதனையொட்டி ஆத்மநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. குரு நமச்சிவாயர் சன்னதியில் காலை 7 மணிக்கு சிவத்திரு பசவராஜ் தலைமையில்
சிவனடியார்களின் சிவ பூஜைகள் நடந்தது. இதனைதொடர்ந்து 9 மணிக்கு சிறப்பு ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று, குரு நமச்சிவாயர் பாடல்கள் பாராயணம் நடந்தது. பின்னர் குரு நமச்சிவாயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனைகள் நடைப்பெற்று மதியம் 1 மணிக்கு மகேசுவர பூஜை. தீபாராதனைகள் நடந்தது. குரு பூஜையையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு பகுதியில் இருந்து
ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.