ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வசந்த உற்சவம் ஜூன் 1ல் துவக்கம்
ADDED :3167 days ago
திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வரும், 1ம் தேதி வசந்த உற்சவம் துவங்கி, 9ம் தேதி வரை நடக்கிறது. வசந்த உற்சவத்தையொட்டி, நீர் நிரப்பி, தாமரை மலர்கள் நிறைந்த வசந்த மண்டபத்தில், வெட்டி வேர்களால் பந்தல் அமைக்கப்பட்டிருக்கும். அந்த பந்தலில், தினமும் மாலை, 6:00 மணிக்கு நம்பெருமாள், உபயநாச்சியார்களுடன் எழுந்தருள்வார். ஜூன் 7 ல், நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சியும், 9ல் தீர்த்தவாரியும் நடக்கிறது.