பழநி மலைக்கோயிலுக்கு வேடமணிந்து வந்த கேரள பக்தர்கள்
ADDED :3095 days ago
பழநி: கேரள மாநில பக்தர்கள் பாரம்பரிய வேடமணிந்து, பழநி மலைக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோடை விடுமுறையை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலுக்கு கேரளா, ஆந்திரா போன்ற வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.குறிப்பாக கேரள மாநில பக்தர்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். நேற்று ஆலப்புழாவை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும், மயில் காவடிகள் எடுத்தும், ராஜா, முருகன், தெய்வானை, காளி வேடமணிந்தும் மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில், பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் நடனம் ஆடியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.