விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் சோமாசி நாயனார் குரு பூஜை விழா
ADDED :3093 days ago
திருப்பூர் : திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், சோமாசி மாற நாயனார் குரு பூஜை நேற்று நடந்தது. சிவபக்தி உடையவராகவும், சிவனடியார்களுக்கு உணவு அளிக்கும் இயல்பு உடையவராகவும், சிவபெருமானையே, முதல்வன் எனக்கொண்டு, சிறந்த வேள்விகள் பல செய்து வந்தார். அதிலும், சோமவேள்வி மிகவும் சிறப்பானது. அதனால், சோமாசிமாறர் என்ற சிறப்பு பெயர் பெற்றவரான, சோமாசி மாறநாயனார் குரு பூஜை, வைகாசி ஆயில்யம் நட்சத்திரத்தில், திருப்பூர் அர்த்தசாம பூஜை சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் நடந்தது. இதில், சோமாசி நாயனாருக்கு, சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், அலங்கார தீபராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், நாயனார், எம்பெருமானை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிபாட்டில், சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.