உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

பழநி வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் கோலாகல துவக்கம்

பழநி: பழநி முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழா, பெரியநாயகியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

வசந்த உற்சவ விழா எனப்படும் வைகாசி விசாகத் விழாவுக்காக, பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று(ஜூன் 1ல்)  கொடியேற்றத்துடன்  கோலாகலமாக துவங்கியது.  மலைக் கோயிலில் உச்சிகாலத்தில் காப்புகட்டுதல் நடக்கும். ஆறாம் நாளில் (ஜூன் 6) முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. மறுநாள் (ஜூன் 7) வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மலைக்கோயில் சன்னதி அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். மாலை 4.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம் நடக்கிறது. ஜூன் 10ல் விழா நிறைவடைகிறது. இணை ஆணையர் ராஜமாணிக்கம் ஏற்பாடுகளை செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !