அளுக்குளி மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு வழிபாடு
ADDED :3092 days ago
கோபி: கோபி, அளுக்குளி அருகே, மோனக்காரன்பாளையம், செல்வவிநாயகர் மற்றும் ஆற்றங்கரை மாரியம்மன் கோவில் திருவிழா, மே, 24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதை தொடர்ந்து தினமும், கம்பத்துக்கு புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் வைத்து வழிபட்டனர். பின் காலை, 9:00 மணிக்கு, மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபட்டனர். இதனால் மோனக்காரன்பாளையம் விழாக்கோலம் பூண்டது.