உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருமலை ஆண்டவர் கோவிலில் தேரோட்டம்

கருமலை ஆண்டவர் கோவிலில் தேரோட்டம்

அந்தியூர்: அந்தியூர், பேட்டை பெருமாள் கோவில் வீதியில் உள்ள, கருமலை ஆண்டவர் கோவிலில், தேரோட்டம் நேற்று நடந்தது முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து, அபிஷேகம் செய்தனர். முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று நடந்தது. விழாவில் காமாட்சியம்மன் பல்லக்கில் முன் செல்ல, பெருமாள் மற்றும் கருமலையாண்டவர் சுவாமிகள், சிறிய தேரில், அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் வரை திருவீதி உலா வந்தது. வழி நெடுகிலும் திரண்ட பெண்கள், தேங்காய், பழம் படைத்து சுவாமியை வழிபட்டனர். முன்னதாக தொலைபேசி நிலையம் அருகில் உள்ள வனக்கோவிலில், பக்தர்கள் பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !