நல்லூரில் அர்ச்சுனன் தபசு
ADDED :3092 days ago
உத்திரமேரூர்: நல்லூரில், திரவுபதி அம்மன் கோவில் விழாவையொட்டி, நேற்று அர்ச்சுனன் தபசு மகாபாரத நாடகம், விமரிசையாக நடந்தது. உத்திரமேரூர் அடுத்த நல்லூர் கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை, வைகாசி மாதத்தில் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டிற்கான விழா, கடந்த , 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக, ஆராதனை நிகழ்ச்சிகள், தினமும், காலை, மாலை நேரங்களில் நடந்தன. மகாபாரதம் குறித்த சொற்பொழிவு மற்றும் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு அர்ச்சுனன் தபசு நாடகம் துவங்கி, நேற்று விடியற்காலை வரை நடந்தது. இதை , அப்பகுதியை சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த , நூற்றுக்கணக்கானோர் கண்டு ரசித்தனர்.