உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால பைரவர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி விழா

கால பைரவர் கோவிலில் வளர்பிறை அஷ்டமி விழா

ஊத்துக்கோட்டை : கால பைரவர் கோவிலில், வளர்பிறை அஷ்டமி நாளையொட்டி நடந்த பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். எல்லாபுரம் ஒன்றியம், தொம்பரம்பேடு கிராமத்தில் உள்ள மகா கால பைரவர் கோவிலில், ஒவ்வொரு மாதமும், வளர்பிறை மற்றும் தேய்பிறை நாளில் வரும் அஷ்டமியில், சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.நேற்று, வளர்பிறை அஷ்டமி நாளையொட்டி, மூலவருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !