திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேர் புதுப்பிப்பு
ADDED :3088 days ago
திருவாடானை, ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேர் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தேரோட்டம் ஜூன் 6ந் தேதி நடக்கிறது. இவ் விழாவை முன்னிட்டு தேர்புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. பழமைவாய்ந்த, இத் தேரில் கலைவண்ணமிக்க சிலைகள் ஏராளமாக உள்ளன. இதில் வர்ணம் பூசும் பணிகள், மற்றும் திரைசீலைகள் அழகுபடுத்துவதற்காக கம்பு கட்டும் பணிகள் நடந்து வருகிறது.