அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :3088 days ago
சிக்கல், மேலக்கிடாரம் சாஸ்தா திருவடி அய்யனார் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 10:00 மணியளவில் விநாயகர், ராக்காச்சியம்மன், இரண்டு சேமக்குதிரைகள், சாஸ்தா திருவடி அய்யனார் கோயில் சன்னதிகளில் உள்ள கும்பத்தில் புனித நீரை சாயல்குடி சண்முக பட்டர் ஊற்றினார். மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குலதெய்வ குடிமக்கள் மற்றும் மேலக்கிடாரம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.