உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேர, சோழ, பாண்டிய ராஜாக்கள் கோவிலில் கும்பாபிஷேக விழா

சேர, சோழ, பாண்டிய ராஜாக்கள் கோவிலில் கும்பாபிஷேக விழா

மொடக்குறிச்சி: கொடுமுடி, புஞ்சைகொளாநல்லி பஞ்., திட்டுக்காட்டூரில் செல்வ விநாயகர், கன்னிமார், கருப்பண்ண சுவாமி, பாம்பாட்டி சித்தர், மகாமுனி, தன்னாசி முனிவர், அத்திமரத்தையன், தேவதைகள் மற்றும் சேர, சோழ, பாண்டிய ராஜாக்கள் சுவாமிகளுக்கு, நூதன ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா, நடந்தது. இதில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். சான்றோர் குல ஜகத்குரு மடாலயம், கருமாபுரம் ஆதினம் ஸ்ரீமது ஆண்ட சிவசுப்பிரமணிய பண்டித குரு ஸ்வாமிகள், ஸ்ரீலஸ்ரீ சிவமணி சிவாச்சாரியார், பிச்சுமணி சிவாச்சாரியார்கள் குழுவினர் நடத்தி வைத்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பழனிசாமி, சரவணன், செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !