தேவகோட்டையில் சேக்கிழார் விழா
ADDED :3086 days ago
தேவகோட்டை, தேவகோட்டை சேக்கிழார் விழா கழகத்தின் சார்பில் சேக்கிழார் விழா நகர சிவன் கோயில் வளாகத்தில் நடந்தது. ஜமீன்தார் சோமநாராயணன் துவக்கி வைத்தார். சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பெரியபுராணம் முற்றோதல் நடந்தது. நிறைவு நாளான வைகாசி பூச்திருவிழாவி்ல நால்வர் வழிபாடும் அதனை தொடர்ந்து சேக்கிழார் வழிபாடும் நடந்தது. விருது வழங்கும் விழா சேவுகன அண்ணாமலை கல்லுாரி தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது. கோவிலுார் ஆதினம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் காரைக்குடி அருணாசலத்திற்கு விருது வழங்கினார். விழாவில் கவிஞர் அருசோமசுந்தரன், பேராசிரியை வள்ளி பேசினர். தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.