கைலாசநாதர் கும்பாபிஷேகம் பிப்ரவரியில் நடத்த முடிவு
ADDED :3086 days ago
தாரமங்கலம்: தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் கும்பாபிஷேகம், 1994ல் நடந்தது. மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த, மூன்றாண்டுகளுக்கு மேலாக, கோவில் சீரமைப்பு பணி நடக்கிறது. இந்நிலையில், கோவில் வளாகத்தில், சங்ககிரி தொகுதி எம்.எல்.ஏ., ராஜா தலைமையில், நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், சீரமைப்பு பணி முடிய, நான்கு மாதங்களுக்கு மேலாகும் நிலை உள்ளதால், கும்பாபிஷேக விழாவை, பிப்ரவரியில் நடத்த, முடிவு செய்யப்பட்டது. இதில், செயல் அலுவலர் கலைச்செல்வி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கோவிந்தன், கண்ணையன் உள்பட, கட்டளைதாரர்கள், முக்கிய பிரமுகர்கள், நன்கொடையாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.