கிரிவலப்பாதையில் கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED :3155 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றப்பட்டன. திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில், அத்தியந்தல் கிராம பஞ்சாயத்தில், நிருதி லிங்கத்திற்கு அருகே, அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு சொந்தமான இடத்தில், தனியார் நபர்கள் ஆக்கிரமித்து 17 கடைகள் வைத்திருந்தனர். இதை கோவில் இணை ஆணையர் ஜெகநாதன் அகற்ற உத்தரவிட்டார். இதையடுத்து, அந்த இடத்தில் உள்ள கடைகள், நேற்று அகற்றப்பட்டு பாதுகாப்பாக வேலி அமைக்கப்பட்டது.