திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி உலா
காரைக்கால்: திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்ச விழாவில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது.
காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது.தினம் விநாயகர், சுப்ரமணியர்,அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உற்சவம் வீதியுலா நடந்தது. பிரமோற்சவ விழாவை முன்னிட்டு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில் தங்க ரிஷபவாகனத்தில் முக்கிய வீதிகளில் சுவாமிவீதி உலா நடந்தது. விழாவின் ஏராளமானவர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 5ம் தேதி சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.