உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி வீரபத்திரசாமி கோவில் விழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி வீரபத்திரசாமி கோவில் விழா தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, வீரபத்திரசாமி கோவில் திருவிழாவில், பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து

நேர்த்திக்கடன் செலுத்தினர். பர்கூர் அருகே, கொண்டப்பநாயனப்பள்ளி கிராமத்தில், குருமன்ஸ் இன மக்களின் ஸ்ரீ வீரபத்திரசாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் சேவையாட்டத்துடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நாளான, நேற்று காலை பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தலையில், தேங்காயை உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இதையடுத்து, குழந்தைகளுக்கு தலை முடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பர்கூர் சுற்று வட்டாரங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !