உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

கரூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

கரூர்: கரூர் அருகே நடந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாவட்டம், புலியூர் வரதராஜ பெருமாள் திருக்கோவில் புனரமைப்பு
செய்யப்பட்டு கடந்த, 2ல் கும்பாபிஷேக விழா, திவ்யபிரபந்தத்துடன் துவங்கியது. பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு சதுஸ்தான அர்ச்சனம் மற்றும் மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து நடந்த மஹாதீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !