உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரதோஷத்தையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிகேஷம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு விநாயகருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நந்திகேஸ்வரர், பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !