தீவனுார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :3363 days ago
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனுார் கிராமத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், 9ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 29ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, கடந்த 30ம் தேதி முதல் 4ம் தேதி வரை தினந்தோறும் காலையில் 9:00 மணிக்கு திருமஞ்சனமும், ேஹாமங்களும் நடந்தது. தினந்தோறும் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், சேஷ வாகனம், அனுமந்த் வாகனம், கருட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் திருக்கல்யாணமும், சுவாமி வீதியுலாவும் நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு, திருத்தேர் வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் முனுசாமி மற்றும் பொது மக்கள் செய்துள்ளனர்.