உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு

வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு

வாடிப்பட்டி: வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பூக்குழி இறங்கியும் வழிபாடு செய்தனர்.

வாடிப்பட்டி அருகே தர்மராஜன்கோட்டையில் பாலதண்டாயுதபாணி வைகாசி விசாகத்திருவிழா கடந்த மே 25ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றுநாள் நடக்கும் விழாவின் முதல் நாளான இன்று பக்தர்கள் பாலதண்டாயுதபாணிக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் வாடிப்பட்டியிலிருந்து பாதயத்திரையாக வந்து வழிபாடு செய்தனர். காலை 10.45 மணிக்கு வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள மௌனகுருசாமி மடத்திலிருந்து அலகு குத்தி பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.  பாலதண்டாயுதபாணிக்கு பாலாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராமப்பொதுமக்கள் செய்துள்ளனர். வாடிப்பட்டி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !