திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்போற்சவம்
ADDED :3297 days ago
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரமோற்சவிழாவை முன்னிட்டு தெப்போற்சவம் நடந்தது. காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலின் பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி துவங்கியது.தினம் விநாயகர், சுப்ரமணியர்,அடியார் நால்வர் புஷ்ப பல்லாக்கு உற்சவம் நடந்தது.பிரமோற்சவ விழாவில் தங்க ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா நடந்தது. பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் தங்க ரிஷப வாகனம் மற்றும் தேரோட்டம்,சனீஸ்வரபகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. நேற்று இரவு தெப்போற்சவம் நடந்தது.இந்நிகழ்ச்சியில் கட்டளை தம்பிரான்சுவாமி,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.