ஏரி கருப்பராயன் சுவாமி, சப்த கன்னிமார் கோவிலில் ஆடிப் பொங்கல் விழா
ADDED :4 hours ago
சேவூர்: சேவூர் அருகே கிளாகுளம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஏரி கருப்பராயன் சுவாமி, சப்த கன்னிமார், மகா முனியப்ப சுவாமி கோவிலில் கிடா வெட்டு, ஆடிப்பொங்கல் விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏரி கருப்பராயனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. கோவில் விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.