உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசித்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி திருவிழா மே.31ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூன் 3ல் கருட சேவை நடைபெற்றது. இன்று (ஜூன் 8 ல்) காலை 7:00 மணிக்கு தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர். ஜூன் 10ல் தசாவதாரம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் மாரிமுத்து, செயல் அலுவலர் அனிதா செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !